×

ரெய்டில் 963 பவுன், ரூ.15 லட்சம், பல கோடி சொத்து ஆவணம் பறிமுதல்: காமராஜுக்கு 2 மாஜிக்கள் ஆறுதல்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உள்பட 52 இடங்களில் நேற்று நடந்த 13 மணி நேர அதிரடி சோதனையில்  963 பவுன் நகைகள், ரூ.15.50லட்சம் ரொக்கடம், பல கோடி சொத்து ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர், பென்டிரைவ், ஹார்டுடிஸ்கையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச்சென்றனர். அதிமுக முன்னாள் அமைச்சரும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவும், திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான காமராஜ், வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடிக்கு  சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் காமராஜ், இவரது மூத்த மகன் டாக்டர் இனியன், இளைய மகன் டாக்டர் இன்பன், இனியனின் மாமனார் சந்திரசேகரன், காமராஜ் நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் உதயகுமார் உட்பட 6 பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதைதொடர்ந்து காமராஜ் வீடு, அலுவலகம் என திருவாரூரில் 38 இடங்கள், திருச்சியில் 3 இடங்கள், தஞ்சையில் 4 இடங்கள், சென்னையில் 6 இடங்கள், கோவையில் ஒரு இடம் என 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் நேற்று மாலை 6.30 மணி வரை 13 மணி நேரம் தொடர் சோதனை நடத்தினர். இதில் காமராஜ் வீட்டில் நடந்த சோதனையில் சொத்து வாங்கி குவித்ததற்கான முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள், ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் நன்னிலம் வடக்கு ஒன்றிய அதிமுக அன்பழகன் வீட்டில் ரூ.58.44 கோடி தொடர்புடைய 4 ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.இந்த சோதனையில் காமராஜிக்கு சொந்தமான 52 இடங்களில் இருந்து ரூ.41.6 லட்சம் ரொக்கம், 963 பவுன் தங்க நகைகள், 23,960 கிராம் வெள்ளி பொருட்கள், ஐபோன், கம்ப்யூட்டர், பென் டிரைவ், ஹார்டுடிஸ்க், பினாமிகள் பெயரில் வாங்கி குவிக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கணக்கில் வராத ரூ.15.50 லட்சம் ரொக்கம், வங்கி பெட்டக சாவி, ஐபோன், கம்ப்யூட்டர், பென்டிரைவ் ஹார்டுடிஸ்க், வழக்கு ெதாடர்புடைய ஆவணங்களை கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எடுத்து சென்றனர். மேலும் சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், பினாமி பெயரில் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்காய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், 13 மணி நேர ரெய்டு காரணமாக அதிர்ச்சியிலும், மன உளைச்சலிலும் இருந்த காமராஜ் வீட்டுக்கு நேற்று இரவு முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் வந்து ஆறுதல் கூறினர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையும் நடத்தினர்.வீட்டிற்கு சீல் வைப்புதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடியில் உள்ள காமராஜ் நண்பரும், அதிமுக இலக்கிய அணி ஒன்றிய செயலாளருமான சந்திரகாசன் வீட்டில் சோதனை நடத்தினர். இவரது சொந்த வீடு திருத்துறைப்பூண்டி எஜமான் நகரில் உள்ளது. இந்த வீடு பூட்டி இருப்பதால் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில் வருவாய்துறை முன்னிலையில் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது….

The post ரெய்டில் 963 பவுன், ரூ.15 லட்சம், பல கோடி சொத்து ஆவணம் பறிமுதல்: காமராஜுக்கு 2 மாஜிக்கள் ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Kamaraj ,Chennai ,AIADMK ,
× RELATED நேற்றிரவு முதல் மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்!